அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது குழந்தைகளுடன் சினிமா பார்ப்பதற்காக அருகில் உள்ள ஜெயங்கொண்டம் சினிமா தியேட்டருக்கு சென்றுள்ளனர் சினிமா பார்த்துவிட்டு வெளியில் வந்த போது குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க செயினை காணவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக திரையரங்க வேளாளரிடம் புகார் செய்தனர். உரிய பதில் அளிக்காமல் பார்க்கிறோம் என தியேட்டர் தரப்பில் கூறியுள்ளார் இதனையடுத்து வீட்டிற்குச் சென்ற குடும்பத்தினர் மீண்டும் இன்று காலை திரையரங்கிற்கு வந்து காணாமல் போன செயின் குறித்து மேலாளரிடம் கேட்டுள்ளனர் அப்பொழுது செயின் திரையரங்க வளாகத்தில் கிடைக்கவில்லை என்றும் நீங்கள் சென்ற இடங்களில் தேடிப் பாருங்கள் என திரையரங்க மேலாளர் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறிது நேரம் கழித்து தனது உறவினர் ஒருவருடன் திரையரங்க வேளாளரிடம் பேசியுள்ளனர். அப்போது திரையரங்கில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை பார்த்து சொல்வதாக மேலாளர் கூறியுள்ளார் இதனையடுத்து திரையரங்கில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளார் அப்பொழுது திரையரங்கில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கீழே கிடந்த செயினை எடுப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வெளியில் சொன்னால் திரையரங்கிற்கு கெட்ட பெயர் ஏற்படும் என எண்ணிய உரிமையாளர் மற்றும் மேலாளர் திரையரங்கை முழுமையாக சுத்தம் செய்து செயின் கிடைத்தால் எடுத்து தருகிறோம் என மீண்டும் அந்த குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர் உடனடியாக திரையரங்க பணியாளர்களை வரவழைத்து திரையரங்கை சுத்தம் செய்வது போல் செய்து கீழே கிடந்ததாக காணாமல் போனதாக கூறப்பட்ட செயினை குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளனர்.
பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்காக இருப்பது சினிமா. சினிமாவை பார்ப்பதற்காக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக வருகின்றனர். ஆனால் அவர்கள் திரையரங்கிற்கு எடுத்து வரும் பொருட்களுக்கோ அல்லது அணிந்து வரும் நகை உள்ளிட்ட விலைமதிப்புள்ள பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே காணப்படுகிறது பெரும்பாலான திரையரங்குகளில் சிசிடிவி கேமரா வைக்கப்படவில்லை ஆனால் துரதிர்ஷ்டவசமாக சினிமா பார்ப்பவர்களின் விலைமதிப்பற்ற பொருள் காணாமல் போனால் அதனை எடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் எண்ணமும் திரையரங்க பணியாளர்களிடமும் அல்லது திரையரங்க உரிமையாளர் இடமும் இருப்பதில்லை இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான்.
தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டால் ரசிகர்கள் வருகை இன்னம் குறைந்து விடும். எனவே தியேட்டர்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தி ரசிர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது கட்டாயம் என்பதே வெகுஜன மக்களின் எதிர்பார்ப்பு‘