சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த படம் குறித்த விமர்சனங்களால் படம் வசூல் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், விமர்சனங்களால் திரைப்படங்கள் தோல்வியடைவதாக கூறி திரைப்படங்கள் வெளியாகி 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. தற்போது இந்த வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி, திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்குள் விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது. விமர்சிப்பது கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. அவதூறு பரப்பினால் போலீசில் புகார் அளிக்கலாம் என்று கூறி தடை விதிக்க கோர்ட்டு மறுத்துள்ளது.