திருச்சி விமான நிலையத்தில் நேற்று வான் நுண்ணறிவு சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில், 35 ஆயிரம் சிகரெட்டுகள், மற்றும் வெளிநாட்டு அழகுசாதன பொருட்கள், நறுமண ஸ்பிரேகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று ஏர் ஏசிய விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த ஒரு பயணி வைத்திருந்த பார்சலை அதிகாரிகளை கைப்பற்றி அதனை பிரித்து சோதனை போட்டனர். அப்போது அந்த பார்சலில், 26ஆயிரத்து 60 கோல்டு பிளேக் சிககெட்டுகள் இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சிகரெட்டின் மதிப்பு ரூ.4 லட்சத்து 43ஆயிரத்து20. இந்த சிகரெட்டுகளை கடத்தி வந்தவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இதுபோல வளைகுடா நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் இருந்து திருச்சி வநத விமானத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணி கடத்தி வந்த 9140 சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 55 ஆயிரமது 380, அவரிடம் இருந்து வெளிநாட்டு அழகுசாதன பொருட்கள், வாசனை ஸ்பிரேகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது-