Skip to content

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்

  • by Authour

இயேசு கிறிஸ்து  சிலுவையில்  அறையப்படுவதற்கு முன்  40 நாட்கள்  நோன்பு இருந்து போதனைகள் செய்து வந்தார்.  இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் இந்த நோன்பை கடை பிடிக்கிறார்கள். இதை தவக்காலம் என  கூறுகிறார்கள்.

நாளை தொடங்கும் இந்த  திருநாளை விபூதி திருநாள்,  அல்லது சாம்பல் புதன்   என்று அழைக்கிறார்கள். இதையொட்டி நாளை காலை  வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா  பேராலயம் உள்ளிட்ட  அனைத்து தேவாலயங்களிலும்  சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெறும்.  வரும் வெள்ளியில் இருந்து 7வது வெள்ளிக்கிழமை,  புனித வெள்ளியாக( ஏப்ரல் 18)  கடை பிடிக்கிறார்கள்.

புனித வெள்ளியை தொடர்ந்து வரும் ஞாயிறு(ஏப்ரல் 20)  இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

error: Content is protected !!