காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை அண்மையில் மத்திய பாஜக அரசு முடக்கியது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய பாஜக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
காங்.,கட்சியின் வங்கி கணக்கு முடக்கம்…மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..
- by Authour