தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.2.2023) முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள ஆவடி, ஸ்ரீவாரி நகரில் வசிக்கும் சிறுமி டானியாவின்
இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார். உடன் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சிறுமி டானியாவின் பெற்றோர் உள்ளனர்.