கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. அதாவது 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே முதல்வர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. இதனால் கடந்த 5 நாட்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை இன்று அதிகாலை முடிவுக்கு வந்தது. அதன்படி சித்தராமையா முதல்வராகவும், சிவக்குமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து வரும் 20-தேதி பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பதவி விழா ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இன்று மாலை பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக(முதல்வராக) தேர்வு செய்யப்படுகிறார். அதைத்தொடர்ந்து சித்தராமையா கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.