தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்து இன்று வாப்பஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்தது. இதனையடுத்து சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுங்கீடு செய்யும் பணி முடிவடைந்தது. மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிதம்பரம் தொகுதியில் விசிக-வுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவித்தது தேர்தல் ஆணையம்.
