கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் அருகில் தெற்கு ரத வீதியில் புதிதாக ஸ்வீட் & பேக்கரி கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெல்ஜியம் சாக்லேட்டில் 5 நாட்களில் நடராஜர் சிலை தத்ரூபமாக செய்யப்பட்டது.
3 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட இந்த சிலை 72 கிலோ சாக்லேட்டில் சிதம்பரம் கோயிலில் உள்ள நடராஜர் சிலையை போன்று அச்சு அசலாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் குளிரூட்டப்பட்ட நிலையில் இருந்தால் இந்த பெல்ஜியம் சாக்லேட்டில் செய்யப்பட்ட நடராஜர் சிலை சுமார் 6 மாதம் வரை தன்மை மாறாமல் இருக்கும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.