Skip to content
Home » சீன பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்…..

சீன பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்…..

கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரம் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீனா நாட்டை யீஜியோ சேர்ந்த பெண்ணுக்கும் இன்று காலை கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன், இந்திய கலாச்சாரத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மணமகன் பாலச்சந்தர் மணமகள் சீனா நாட்டைச் சேர்ந்த யீஜியோ பெண்ணுக்கும் தமிழ் முறைப்படி பட்டு வேஷ்டி சட்டை மற்றும் பட்டு புடவை தங்க அணிகலன் அணிந்து  தமிழ் முறைப்படி யாக குண்டம் அமைத்து மந்திரம் முழங்க மங்கள இசையுடன் திருமாங்கல்யம் கட்டி திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மணமகன் மற்றும் சீனா நாட்டை சேர்ந்த மணமகள் யீஜியோ திருமணத்திற்கு பிறகு நடைபெற்ற அனைத்து தமிழ் முறை சம்பிரதாயத்தை முறைப்படியும், சீனா மணப்பெண் யீஜியோ ஆர்வமுடனும் ஒவ்வொன்றாக மனமகிழ்ச்சியுடன் செய்தார்.

அப்போது சீனா நாட்டை சேர்ந்த யீஜியோ பெண்ணின் உறவினர்கள், மணமகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆனந்தமாக புகைப்படத்தை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் சீனா மணமகள் யீஜியோ, மணமகனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்களை அரவணைத்து அன்புடன் பேசி மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ச்சி அடைந்ததை காண முடிந்தது.

இந்நிலையில் மணமகன் பாலச்சந்தர் கூறியதாவது, “சீனா மற்றும் பாங்காகில்  தொழில் முனைவராக இருந்து வருகின்றேன். அப்போது எனக்கும் சீனா நாட்டை சேர்ந்த யீஜியோ பெண்ணிற்கும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்ந்து பேசிக் வந்தோம். இந்த தொடர்பு நாளடைவில் நல்ல நட்பாக மாறி பின்னர் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து இரண்டு பேரும் மனதளவில் காதல் ஏற்பட்டு இந்திய கலாச்சாரம் மற்றும் தமிழ் முறைப்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணியதால் இன்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில்  திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருமணத்திற்கு முன்பு இருந்த காதலுடன் எங்களது வாழ்க்கை பயணம் ஆனந்தமாக கடப்போம் என நம்புகிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *