Skip to content

மிளகாய் பொடி தூவி… மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ‌ மண்டலவாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (70) இவருடைய மனைவி கனகா (65) இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.

இவருடைய மகன் ஆறுமுகம் இவர் தாயின் வீட்டின் அருகே வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தனியாக வயது முதிர்ந்த  தம்பதியினர் தனியாக வசித்து வருவதை அறிந்த மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அப்போது வெளியே வந்த மூதாட்டி கனகாவின் முகத்தில் மிளகாய் பொடி தூவி துணியால் முகத்தை மூடி கட்டையால் சாரா மரியாக அடித்துள்ளனர்.  இதனால்

கனகா கத்தி கூச்சலிடிவே கழுத்தில் இருந்த நான்கு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார்.

இதனை அறிந்த அவருடைய மகன் ஆறுமுகம் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். எனவே ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தனியாக வசித்து வரும் மூதாட்டியிடம் மிளகாய் பொடி தூவி நான்கு சவரன் தங்க நகை பறித்துச் சென்ற சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திருப்பத்தூரில் தனியாக வசித்து வரும் முதியவர்களிடம் மர்ம நபர்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!