கோவை, மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சி தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும் கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்கு உட்பட்ட சூப்பர் கார்டன் பகுதியில் சிறுமி ஒருவர் பள்ளி சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த தெரு நாய்கள் அந்த சிறுமியை துரத்தியது.அதிர்ச்சி அடைந்த சிறுமி வேகமாக அலறிக்கொண்டு வீட்டில் உள்ளே நுழைந்ததால் தெரு நாயிடமிருந்து சிறுமி தப்பியது.
தெருநாய்கள் சம்பந்தமாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கை
எடுக்கவில்லை எனவும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்னே அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தெரு நாய் சிறுமியை துரத்திய காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.தற்போது இந்த காட்சி சமூக வலைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.