அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் காலனி தெருவை சேர்ந்த வீரபாண்டியன் என்பவர் அதே பகுதியில் 11 ஆம் வகுப்பு பயிலும் ஒரு சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார். சிறுமியின் கர்ப்பத்தை தனது தாய் மற்றும் அக்கா உதவியுடன் கலைத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டியன் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்து வீரபாண்டியனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
