தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு காதலர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார். தொடர்ந்து இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இந்த நிலையில் அவ்வப்போது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்த இந்த தம்பதி. தற்போது குழந்தைகள் நன்கு வளர்ந்துவிட்ட நிலையில் அவர்களின் முகம் நன்கு தெரியும் விதத்தில் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளனர்.
அதுமட்டுமலாமல் அதற்கு கேப்ஷனாக ‘என் முகம் கொண்ட என் உயிரே…என் குணம் கொண்ட என் உலகே’ என்ற விக்னேஷ் சிவன் எழுதிய அழகிய பாடல் வரிகளையு இணைத்துள்ளனர். இரட்டை குழந்திகளின் பிறந்தநாளை கொண்டாட மலேசியாவில் உள்ள இரட்டை கோபிரத்திற்கு, இரட்டை குழந்திகளுடன் சென்றுள்ளனர் இந்த தம்பதி. அதனை முன்னிட்டு வெளியான இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.