மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மகாதான வீதியில் முத்துக்குமார்- ஜெயந்தி தம்பதியினரின் வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வருகிறது ஜில்லுபட்டு என்கின்ற பச்சைக்கிளி. இவர்களது குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக வளர்ந்து வரும் ஜில்லுபட்டு பச்சைக்கிளி தம்பதியினர் குழந்தைகளான இலேஷ்குமார், ஹரிதாஸ் ஆகியோருடன் காணும் பொங்கலன்று அவர்களது தோளில் அமர்ந்து வெளியே உலா சென்றுள்ளது. சிறுவர்கள் பந்து விளையாடுவதைக் கண்டது
வீட்டிற்கு கொண்டு வந்ததும் பலூனை தலையால் முட்டி விளையாட ஆரம்பித்தது சிறுவர்கள் எடுத்து பலூன் பந்தை போடுவதும் அலகினால் முட்டி தள்ளுவதும் சிறுவர்கள் பயிற்சி அளிப்பதும்
சிறுவர்களிடம் விளையாடவா விளையாடவா என்று தனது அழகிய குரலால் பேசி அழைத்தது. பிறகு சிறுவர்களுடன் கிளி விளையாடிய காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இச்செயலை கண்ட சிறுவர்களும் கிளியுடன் உற்சாகமாக விளையாடிய காட்சியை முத்துக்குமார் தனது செல்போனில் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.