Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின்…… குழந்தைகள் தின வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின்…… குழந்தைகள் தின வாழ்த்து

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் நேருவின் பிறந்த நாள், குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: மழலை மாறாத சிரிப்புடன் – கற்பிதங்கள் இல்லா உள்ளத்துடன்  உலகையும் – சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை.

நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம். வளமான – நலமான – பசுமையான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என்ற உறுதியை குழந்தைகள் தின வாழ்த்தாகத் தெரிவிப்போம். நமது உலகையும் – வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!