புதுகை மாவட்டம் பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் உலக குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் க.அரங்குளவன் தலைமை தாங்கினார். புதுகைப் பாவை இலக்கியப் பேரவையின் தலைவர் பேராசிரியர் நா.பூர்ணிமா, ஆசிரியர்கள் மா.தமிழ்ச்செல்வி, சி.ஈஸ்வரி, சு.சுகந்த நேசகுமாரி, க.நித்யகல்யாணி, வி.ராதா, எஸ்.சுவாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்ச் செம்மல், கவிஞர் ரமா ராமநாதன் கலந்து கொண்டு வினாடி-வினாப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும். புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பேசினார்.முன்னதாக பட்டதாரி தமிழாசிரியர் ச.அடைக்கலசாமி வரவேற்றார். முடிவில் புதுகைப் பாவை இலக்கியப் பேரவையின் செயலர் பேராசிரியர் சே.சுசிலாதேவி நன்றி கூறினார்.