தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடந்தது. பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து பச்சிளம் குழந்தை வீசப்பட்டது. குழந்தையின் தாயார் யார் என விசாரணை நடத்தி வருகிறோம். பிறந்த பச்சிளம் குழந்தையை வளர்க்க விரும்பாதவர்கள் தயவுசெய்து குழந்தையை ஏதும் செய்துவிட வேண்டாம். அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விவரங்களை கூறுங்கள். உங்களது தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படும்.
தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொட்டில்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொட்டில்களில் குழந்தையை வளர்த்து அதன் பின்னர் அரசு காப்பகத்தில் வைத்து பராமரிப்போம். எனவே யாரேனும் தயவு செய்து பிறந்த பச்சிளம் குழந்தையை வளர்க்க முடியவில்லை அல்லது வேறு ஏதும் காரணத்திற்காக எதுவும் செய்து விட வேண்டாம். எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அரசு காப்பகத்தில் வைத்து பராமரிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் மாரிமுத்து, பாரதிராஜா ,முனியசாமி, மயக்கவியல் மருத்துவர் உதயணன் மற்றும் டாக்டர்கள், சமூக நலத்துறை பணியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர். இதற்காக தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு தொண்டு நிறுவனங்கள் நான்கு தொட்டில்கள் வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.