புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுனையக்காடு ஊராட்சியில் புதிதாக கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலைய கட்டடப்பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதாப்பிரியா, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் , சொர்ணராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிங்காரவேலன் கோகுலகிருஷ்ணன், சிவகாமி , வட்டாட்சியர் பாலகிரு ஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரிதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.