மயிலாடுதுறையை சேர்ந்த ரிக்கப் சந்த்தின் 18 வயது மகளை காணவில்லை. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர், மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த ஒளிப்பதிவாளர் பாலச்சந்திரன்(20) என்பவர் அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. அவர்களை நிலையம் அழைத்து விசாரித்ததில். பெண் தனது விருப்பப்படிதான் பாலச்சந்திரனுடன் சென்றதாகவும் அவருடன்தான் வாழப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களது திருமணப் புகைப்படம் வலைதளங்களில் வைரலாகியது, இதைக் கண்ட பெண் வீட்டார் இது குழந்தை திருமண தடைசட்டப்படி தவறு என்றும் திருமணம் செய்த பாலசந்திரனைக் கைதுசெய்யக் கோரினர். ஆனால் அந்தப் பெண்ணை பாதுகாப்புடன் பாலச்சந்திரனுடன் காவல்துறையினர் அனுப்பி வைத்துவிட்டனர்.
குழந்தை திருமணச் சட்டப்படி நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், போலீசார் அவர்களைக் கைதுசெய்து 34 நபர்கள்மீது வழக்குப் பதிவுசெய்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்ணின் உறவினர்கள் மயிலாடுதுறை காவல்துறையினர் குழந்தை திருமணச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்காமல் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர், இதுகுறித்து மணமகனின் உறவினர்கள் நண்பர்கள் , திருமணத்தை நடத்தி வைத்த பூசாரிகள் என அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து கோரிக்கை விடுத்துள்ளனர்.