ஒருங்கிணைந்த பள்ளி கல்வி – அரியலூர் மாவட்டம் 0 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரியலூர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகிய இரண்டும் இணைந்து இன்று 24 .1.2023 அரியலூர் மாவட்டம் அரியலூர் ஒன்றியத்தில் நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி ,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் தட்ஷிணாமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா , ராஜா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜ பிரியன், உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், பள்ளி தலைமை ஆசிரியர் சாமிதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ் செல்வி, பள்ளித்துணை ஆய்வாளர் பழனிச்சாமி, வட்டார கல்வி அலுவலர்கள் கார்மேகம், கலியபெருமாள் , வட்டார மேற்பார்வையாளர் ராஜேஸ்வரன் வட்டார ஒருங்கிணைப்பாளர்
ரத்னாவதி, ஆசிரியர் பயிற்றுநர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், மாவட்ட விளையாட்டு துறை அலுவலர், மருத்துவர்கள், அனைத்து ஒன்றிய சிறப்பாசிரியர்கள் ,இயன் முறை மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகிய அனைவரும் முகாமில் கலந்து கொண்டனர். இதில் ஆதார் பெறுவதற்கு விண்ணப்பம் அளித்தல், முதலமைச்சரின் காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பித்தல், உதவி உபகரணங்கள் பெறுவதற்கு பரிந்துரைத்தல், பயண சீட்டு சலுகைக்கு விண்ணப்பித்தல் ,தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தல் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவதற்காக முகாம் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயனடைந்தனர்.