திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள உடுமலை பள்ளபாளையம் பகுதியில் ஆபத்தை உணராமல் இரண்டு குழந்தைகளை ஜீப் ஓட்ட வைத்ததும் மற்றும் அதே குழந்தையை ஜீப்பின் முன்புறம் மேலே அமர வைத்து ஒரு குழந்தை வாகனத்தை இயக்கி சென்றவாறு வீடியோ எடுக்கப்பட்டு அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.,
இரண்டு குழந்தைகள் நான்கு சக்கர வாகனத்தை இயக்கும் இந்த வைரல் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,
இதுகுறித்து காவல்துறையும் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அந்த அதிகாரிகள் கூறுகையில் குழந்தைகளை ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியது சட்டப்படி குற்றம் தான் இருந்தாலும் அவர் தனது சொந்த விவசாய பூமியில் தான் வாகனத்தை குழந்தைகளிடம் கொடுத்து இயக்கியுள்ளார் பொதுசாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற செயலில் ஈடுபட்டிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனத்தை பறிமுதல் செய்து அவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.., ஆனாலும் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை செய்ய இருக்கிறோம் என்றனர்.