திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியை சேர்ந்தவர் டிரைவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் (10). இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை தினமாக இருந்ததால் அன்றைய தினம் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது பூங்காவிற்கு அருகில்
இருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். இந்த செய்தியை அறிந்ததும் அமைச்சர் மகேஸ் இல்லத்திற்குச் சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் சிறுவனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மதிவாணன் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் காட்டூர் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.