திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகம் கிராமத்தில் பிறந்து சில மணி நேரத்திலேயே பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற இரக்கமற்ற கொடூர மனிதர்கள்.போலீசார் உதவியுடன் கிராம மக்கள் குழந்தை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புள்ளம்பாடி அருகே கல்லகம் கிராமத்தில் உள்ள குப்பை தொட்டியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் குப்பைத்தொட்டியில் பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களேயான பெண் குழந்தையை தொப்புள் கொடி கூட அறுக்காமல் குப்பைத் தொட்டில் கிடந்தது .இதனைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையை
குப்பைத்தொட்டியில் வீசி சென்ற இரக்கமற்ற கொடூர மனிதர்களை நினைத்து வேதனையுற்றனர்.
பின்னர் கல்லக்குடி போலீசார் உதவியுடன் கிராம மக்கள் குழந்தையை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லால்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் குழந்தையின் தொப்புள் கொடியினை அகற்றி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பம் குறித்து கல்லக்குடி போலீசார் குப்பைத் தொட்டியில் வீசி சென்ற குழந்தை யாருடையது, யார் வீசி சென்றனர். தவறான வழியில் பிறந்த குழந்தையா? பெண் குழந்தை என்பதால் வீசி சென்றனரா ? இல்லலை வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.