Skip to content

எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…..

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதான பாரதிய பாஷா விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருது வழங்கி வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத் இவ்விருது அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த விருதைப் பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

இந்திய அளவில் புகழ்மிக்க பாரதிய பாஷா பரிஷத் அமைப்பின் விருது பெறவுள்ள எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் பாராட்டுகள்!

சமகாலத் தமிழிலக்கியத்தின் நன்கு அறியப்பட்ட முகமாக விளங்கி, குறிப்பிடத்தக்க பல படைப்புகளை அளித்து, சாகித்திய அகாதெமி, இயல், கலைஞர் பொற்கிழி உள்ளிட்ட பல உயரிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள அவரது எழுத்துப்பணிக்கான மற்றுமொரு ஊக்கமாக இவ்விருது அமையும் என நம்புகிறேன்.

தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கும், மானுடத்தின் மேன்மைக்கும் உரமாகும் மேலும் பல படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்நோக்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!