சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயிலில் பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம் அமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது.புதிய கொடிமரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை அளித்த மனுவில் பழைய கொடிமரத்தை மாற்றிவிட்டு புதிய கொடிமரம் மட்டுமே நிறுவப்படும் என உறுதி அளித்தனர். அதை மனுவாக தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது.