சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவின பதிவேடுகள் மற்றும் கணக்கு அறிக்கைகளின் மீதான ஆய்வுகள் தேர்தல் செலவின பார்வையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், தேசிய மாநில அளவிலான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் கணக்குகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களின் கணக்குகள் மற்றும் இதர வேட்பாளர்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வுகளில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தது முதல் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக செலவிடப்பட்ட செலவினங்கள் தொடர்பான விவரங்கள் தேர்தல் செலவின கணக்குகள் மற்றும் பதிவேடுகளையும் வேட்பாளர்கள் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட முகவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.
வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் செலவினங்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணைய செலவின பார்வையாளர்கள் அரியலூர் மாவட்ட செலவின கண்காணிப்புக் குழு பதிவேடுகளுடன் வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. மேலும், நடைபெற்ற ஆய்வுகளில் வேட்பாளர்களும் மற்றும் வேட்பாளர்களின் சார்பில் அவர்களது முகவர்களும் பங்கேற்று தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்தனர்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சந்திரசேகர், தேர்தல் தனி வட்டாட்சியர் வேல்முருகன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டர்.