அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையம் பேரூரை சார்ந்த மாணவி சர்வாணிகா, இலங்கை வாஸ்துவாவில் நடைபெற்ற 16-வது ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 7 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 6 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அவர் ஊருக்கு வருகை தந்த போது, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.
உடன் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் அக்பர் அலி,பொதுக்குழு உறுப்பினர் வி.எம்.ஷாஜஹான், துணைச்செயலாளர் ராயர்,மாவட்ட பிரதிநிதிகள் துருவேந்திரன், ரஞ்சித்குமார் மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள்,வியாபார பெருமக்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.