உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் குகேஷ்-க்கு ரூ. 5கோடி பரிசு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.
வெற்றி பெற்றதில் பெரும் மகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் விட்டார் குகேஷ். இது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார் குகேஷ். குகேஷுக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.