திருச்சி திருவெறும்பூர் அருகே பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மியூனிசன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு செயல்படும் நிறுவனங்களுக்கு இடையான 5 நாள் நடந்த எஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட்டின் ஒரு பிரிவான திருவெறும்பூர் அருகே உள்ள எச் இபிஎப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு இடையே நட்புறவை வளர்க்கும் அதே வேளையில் ஊழியர்களிடையே ஒழுக்கத்தையும் மன சுறுசுறுப்பையும் ஊக்குவிக்கும் வகையில் 2024 செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 வரை 2வது வருடாந்திர அகில இந்திய மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட்டின் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது .இதில் 12 நிறுவனங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியின் முதல் பரிசை கமேரியா நிறுவன அணியும், இரண்டாவது பரிசை புனே அணியும், மூன்றாவது பரிசை கடிக்கி அணியும், நாலாவது பரிசை வாரங்கல் அணியும், ஐந்தாவது பரிசை சாந்தா அணியும் பெற்றன.
அதன் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. அதற்கு மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான தேபாஷிஷ் பானர்ஜி கலந்து கொண்டு, போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி நினைவு பரிசு வழங்கிய பேசியதாவது
மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் இந்திய ஆயுதப்படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை உற்பத்தி செய்கிறது.
படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் கணிசமான ஏற்றுமதி சந்தைப் பங்கைக் கொண்ட சிவில் சந்தை ஆகியவை மனித மூலதனம் மற்றும் தொழில்துறை உறவுகளின் வளர்ச்சிக்காக நிறுவனத்திற்குள் விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தின் கலாச்சாரத்தை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது என்றார்.