தமிழகத்தை சேர்ந்த குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு தமிழக முதல்வர் ரூ.5 கோடி ரொக்கப்பரிசு வழங்கி கவுரவித்தார். இந்த நிலையில் மத்திய அரசு இன்று 2024ம் ஆண்டுக்கான கேல்ரத்னா விருது அறிவித்தது. அந்த விருது குகேஷ்க்கும் கிடைத்து உள்ளது. ஜனவரி 17ம் தேதி டில்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி முர்மு இந்த விருதினை குகேஷ்க்கு வழங்குவார்.
இது தவிர ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதனை படைத்த இந்திய வீரர் மனுபாக்கர், மற்றும் ஹாக்கி வீரர் ஹர்மன் பிரித் சிங், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பிரவீன் குமார் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.