சென்னையில் ஜூன் மாதத்தில் 100 மின்சார பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய 5 பணிமனைகளில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரப் பேருந்துகளுக்கான சார்ஜர் வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.