சென்னையில் கடந்த வாரம் பெய்த 24 மணி நேர மழையால் 4 மாவட்டங்கள் வௌ்ளக்காடானது. இப்போது தான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை கே. கே. நகர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் பில்லர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை நீடித்தால் சென்னையில் மீண்டும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
