வெளிநாட்டை சேர்ந்த பயணிகள் 15 பேர் சென்னையிலிருந்து கொச்சி வரை சைக்கிளில் சுற்றுலாவாக செல்கின்றனர். அவர்கள் நேற்று தஞ்சாவூருக்கு வந்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 பேர் சென்னையிலிருந்து கடந்த 21ம் தேதி சைக்கிளில் சுற்றுலாவாக புறப்பட்டனர். மொத்தம் 15 சைக்கிள்களில் 9 ஆண்கள், 6 பெண்கள் என இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரி, சிதம்பரம் வழியாக வந்த இவர்கள் தஞ்சாவூருக்கு நேற்று முன்தினம் வந்தனர். தஞ்சாவூர் பெரியகோயிலை பார்த்துவிட்டு இரவு தஞ்சையில் தங்கினர். பின்னர் நேற்று காலை சைக்கிள்களில் காரைக்குடி நோக்கிப் புறப்பட்டனர். தினமும் 100 கி.மீ. பயணம் செய்யும் இவர்கள் மொத்தம் 15 நாள்களில் ஆயிரத்து 400 கி.மீ. கடந்து கொச்சி வரை செல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை to கொச்சி சைக்கிளில் தஞ்சை வந்த வௌிநாட்டு பயணிகள் 15 பேர்…
- by Authour
