இந்தியா- வங்கதேசம் இடையே சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 80 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 102, ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 65 நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில் 91.2 ஓவர்களில் 376 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.வங்கதேச அணி தரப்பில்ஹசன் மஹ்முத் 5, தஸ்கின் அகமது 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. ஷத்மான் 2 ரன்னில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் போல்டானார். ஜாகிர் ஹசன் (3), மொமினுல் ஹக்(0) ஆகியோர் ஸ்டெம்புகள் சிதறஆகாஷ் தீப் பந்தில் நடையை கட்டினர். வங்கதேச அணி 47.1 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆன்ஆனது. மெஹிதி ஹசன் 52 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஆகாஷ் தீப், ஜடேஜா, சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். வங்கதேச அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி 227 ரன்கள்முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்தது.
ரோஹித் சர்மா 5 ரன்னில் தஸ்கின் அகமது பந்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் நஹித் ராணா பந்திலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய விராட்கோலி 37 பந்துகளில், 2 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் மெஹிதி ஹசன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 23 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது.
308 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. கில்லும்(119 ரன்), பண்ட்டும் ஆட்டத்தை தொடர்ந்தனர். பண்ட் 109 ரன்னில் ஆட்டம் இழந்ததும் ஆட்டம் டிக்ளேர் செய்யப்பட்டது. அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 287. நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.
தொடர்ந்து வங்கதேச அணி 2வது இன்னிங்சை ஆடியது. 515 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய இலக்குடன் வங்க தேச தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாகிர் ஹசன்(33), ஷேட்மன் இஸ்லாம்(35) மற்றும் ஹக்(13) அவுட் ஆனார்கள். அப்போது வங்கதேச அணியின் ஸ்கோர் 124. கேப்டன் ஷான்டோ(35) ரகீம் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
முதல்டெஸ்டில் இந்தியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இன்றே வெற்றி கிடைக்குமா அல்லது நாளை வெற்றி கிடைக்குமா என்பது இன்று மாலை உறுதியாகும்.