சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகரைச் சேர்ந்தவர் ஆசிரியை வின்சி புளோரா. கடந்த இரு தினங்களுக்கு முன் இவரது வீட்டில சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இதில், வின்சிக்கு உடல் முழுவதும் 60 சதவீத தீக்காயமும், சிலிண்டர் கொடுத்த மணிகண்டனுக்கு 45 சதவீத தீக்காயமும் ஏற்பட்டது. இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் வின்சி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.