சென்னை பெரவல்லூர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் ஜெயசித்ரா (49). செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்த ஜெயச்சித்ரா, திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார். 1997 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், செம்பியம் போலீஸ் ஸ்டேசனில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணி புரிந்து வருகிறார். நேற்று காவல் நிலைய தபால் பணி காரணமாக தடய அறிவியல் துறைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். பின்னர் அயனாவரம் பழனியப்பா தெருவில் வசித்து வரும் தனது அக்கா பண்டிசெல்வி வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
பாண்டி செல்வியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஜெயச்சித்ரா திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதனையடுத்து அவரது அக்கா குடும்பத்தினர் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு சக்கரை அளவு அதிகமாக இருப்பதாகவும், பல்ஸ் அளவு குறைவாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு, உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அதன்பேரில் KMC அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஜெயச்சித்ரா ஏர்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த எஸ்எஸ்ஐ ஜெயசித்ரா உடல் அவரது அக்கா பாண்டிசெல்வி வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் வம்பரம்பட்டிக்கு உடலை எடுத்துச் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.