சென்னை, கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சக்தி நகர் பகுதியில் சேர்ந்த மில்லர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் நேற்று இரவு ஆட்டோ ஓட்டிவிட்டு தனது வீட்டின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக டிரான்ஸ்பார்மரில் இருந்து தீ பொறி வெளியேறி ஆட்டோ மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது இதனையடுத்து அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி ஆட்டோ மெயில் பிடித்த தீயை அனைத்தனர். இருப்பினும் ஆட்டோ முழுமையாக எரிந்து நாசமானது.. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை… ட்ரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டு ஆட்டோ எரிந்து சேதம்..
- by Authour
