Skip to content

ஒளியவில்லை இன்று சென்னை வருகிறேன்.. பேச்சாளர் மகா விஷ்ணு வீடியோ

  • by Authour

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் நடந்த சொற்பொழிவில், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளி சங்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சொற்பொழிவுக்கு அனுமதி அளித்த தலைமையாசிரியை இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியா தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மகாவிஷ்ணு நேற்று  வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நான் எங்கும் தப்பி ஓடி ஒளியவில்லை. ஓடி ஒளியும் அளவுக்கு நான் என்ன கருத்துக்கள் கூறிவிட்டேன். திருப்பூரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். நாளை ஆஜராகி விளக்கம் தருகிறேன். சீறும் அமைச்சருக்கு நேரில் சென்னை வந்து விளக்கம் அளிக்கிறேன். அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு விளக்கம் சொல்லும் அளவிற்கு எனக்கு அறிவு இருக்கிறதா என தெரியவில்லை. தமிழக காவல்துறை, சட்டத்துறை மீது மிகவும் மரியாதை வைத்துள்ளேன்.நாளை சென்னை வருவேன். எனது ஆஸ்திரேலியா பயணம் திட்டமிட்ட பயணம். 8 நாட்களுக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். என விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் மகாவிஷ்னு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!