சென்னை தாம்பரத்தில் பெண்ணை கிண்டல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ சீனிவாசன் நாயர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சுரங்கபாதையில் தனியாக நடந்து சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்று அவரிடம் தவறாக நடந்துககொண்ட எஸ்.ஐ. சீனிவாசனை அந்த வழியாக சென்றவர்கள் மடக்கி பிடித்தனர். அப்போது அவர்களிடம் தகராறு செய்த எஸ்.சீனிவாசன், தான் எஸ்’.ஐ. எனக்கூறி மேலும் எகிறினார். அதற்குள் ரயில்வே போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் சிக்கி இருந்த ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ- சீனிவாசனனை மீட்டு விசாரித்து வந்தனர். சீனிவாசனை தாம்பரம் போலீஸ் ஸ்டேசனில் வைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது அவரை சஸ்பெண்ட் செய்து ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் ராஜையா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.