சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் தடம் புரண்டு விபத்தானது. பணிமனைக்கு சென்ற போது தடம் புரண்ட ரயில். ரயில் பெட்டியின் நான்கு சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளது. பணிமனைக்கு சென்ற ரயில் என்பதால் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரயில் பெட்டியை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.