சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கடந்த 2ம் தேதி செல்போன் பறிக்க முயற்சித்தபோது பிரீத்தி என்ற கல்லூரி மாணவி ரயிலில் இருந்து தவறி விழுந்தார். செல்போனை காப்பாற்ற முயன்ற அவர் ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவி ப்ரீத்தி உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்போன் பறிப்பில் ஈடுபட்ட விக்னேஷ் , மணிமாறன் ஆகிய ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான இருவர் மீதும் கொலை, வழிப்பறி செய்தல் ஆகிய இரு பிரிவுகளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
