மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் மரம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை வரை 340 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து விடாமல் பெய்கிறது. இதன் மொத்த அளவு இன்று மாலை தான் தெரியவரும். இது கடந்த 47 ஆண்டுகள் வரலாற்றில் பெய்யாத கனமழை ஆகும். இதற்கு முன்னதாக சென்னையில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது பெய்த மழையின் அளவு 340 மி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது.