மிக்ஜாம் புயல் தாக்கம், மழை வெள்ளம் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்பட்டது. தற்போது மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில் படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் வலைதளப் பக்கத்தில், சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு, எஸ்ஏஎப் கேம்ஸ் வில்லேஜ், ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, எஸ் & பி பொன்னியம்மன் நகர், சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், ராயப்பேட்டை, மேற்கு மாம்பலம், தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள்.
சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட சிஎம்பிடி, ஐசிஎப், இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள் சென்னை தெற்கு – I மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி, கிண்டி, ராமாபுரம், ராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு – II மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், கடப்பேரி ஆகியவற்றின் ஒரு பகுதி என பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.