சென்னை பாரிமுனை கார்னர் அரண்மனை அர்மேனியன் தெரு அருகே உள்ள 4 மாடி கட்டிடம் ஒன்று இன்று எதிர்பாராத இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்டிடத்தை புணரமைக்கும் பணியில் 10 பேர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
