சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது போலீசார் சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது… புத்தாண்டு தினத்தில் சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பைக் ரேஸ் நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிக்கப்படும். பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ‘உயிரிழப்புகள் இல்லாத புத்தாண்டு’ என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட உள்ளோம். புத்தாண்டு தினத்தில் மெரினாவில் பொதுமக்கள் கூட தடையில்லை. மக்கள் கூட்டத்தை கண்காணிக்க அதிநவீன இரவு நேரடி டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. சென்னை காமராஜர் சாலையில் ரிசர்வ் வங்கி முதல் கலங்கரை விளக்கம் வரை மாலை 7 மணி முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. கடற்கரை பகுதியில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீல் வைக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று இவ்வாறு கூறினார்.