சென்னை அருகே பூந்தமல்லியில் சித்த மருத்துவர் ஊசி போட்ட அடுத்த 10 நிமிடத்தில் முதியவர் ராஜேந்திரன் உயிரிழந்துள்ளார். ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு காவல்துறை அனுப்பி வைத்தனர்.சித்த மருத்துவரான பெருமாளை கைது செய்த பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.