தி.மு.க.மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று மாலை நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்து மூலம் சென்னை செல்கின்றனர். பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் இருந்து செல்லும் பேருந்தை ஆ.இராசா.எம்.பி., கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
இதில் மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, இரா.ப.பரமேஷ்குமார், டாக்டர் செ.வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், ஒன்றிய செயலாளர் எம்.ராஜ்குமார், நகர் மன்ற துணை தலைவர் து.ஹரிபாஸ்கர், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.