சென்னை மதுரவாயல் சுற்றுவட்டாரப்பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுரவாயல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் இருவர் சிக்கினர். விசாரணையில் இருவரும் புழல் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் (23) மற்றும் மணிகண்டன் (36) என்பது தெரியவந்தது. இதில் மணிகண்டன் கேட்டரிங் வேலை செய்து வருபவர் என கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின்படி வானகரம் பகுதியை சேர்ந்த பாசில் உல்லா (36) என்பவரை போலீசார் பிடித்தனர். 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 5.07 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை…. மெத்தம்பெட்டமைன் பறிமுதல்… 3 பேர் கைது
- by Authour
