Skip to content

சென்னை மதுரவாயல் காமாட்சி அம்மன் கோயில் மாசிமக உற்சவம் குவிந்த பக்தர்கள்

ஆலப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் 7நாட்கள் நடைபெறும் மாசிமக உற்சவ திருவிழா கோலாகலமாக தொடங்கியது. சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பதினோராம்

ஆண்டு மாசிமக திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் குவிந்து அம்மனை வழிபட்டு சென்றனர். ஏழு நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில், விளக்கு பூஜை, அம்மன் வீதி உலா, ஆயிரம் பேருக்கு அன்னதானம், பாதயாத்திரை உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

error: Content is protected !!